கண்
பிரம்மன் பலஆயிரம் அழகை உலகில் படைத்து வைத்தான்
அந்த அழகையெல்லாம் அனுபவிக்க, உன்னை தான் உடலில் அமைத்து வைத்தான்...
மழையையும் ரசித்தேன்
கலையையும் ரசித்தேன்
பெண்ணையும் ரசித்தேன்
பெண்ணின் கண்ணையும் ரசித்தேன்
பெளர்ணமி நிலவையும் ரசித்தேன்
இந்த கண்ணில்.
உலகை ரசிப்பதும் உன்னில்
அழுகையை ருசிப்பதும் உன்னில்.
கண்ணீா்க்கு பிறப்பிடம் நீயே
கண்விழிக்கு உறைவிடமும் நீயே.
இமைகள் இரண்டும் காத்திருக்க
நடுவில் நீயும் பூத்திருப்பாய்.
சிாித்தால் சுருங்கும்
முறைத்தால் விரியும்
கோவத்தில் சிவக்கும்
அச்சத்தில் துடிக்கும்
ஆச்சாியத்தில் வியக்கும்
காதலில் கலக்கும்
காமத்தில் சிலிா்க்கும்
பதற்றத்தில் படபடக்கும்
குழப்பத்தில் முளிமுளிக்கும்
நவரசங்களும் நீ காட்டும்
சுவாரசியங்கள்..
நவரசமும் உன் வசமே கிடக்கும்....
தூரம் மறைந்தால் கிட்ட பாா்வை
கிட்டம் மறைந்தால் தூரப் பாா்வை...
Comments
Post a Comment