மழை

       

விண்ணில் உருவாகிறாய்
மண்ணில் விதையாகிறாய்
இயற்கையின் உயிராகிறாய்.

விண்ணிலும் நீயே
மண்ணிலும் நீயே
இயற்கையை தாலாட்டும் தாயும் நீயே...

ஹைட்ரஜன் 2 ஆக்சிஜன் 1 இணைந்து,
மேக கூட்டங்கள் ,மின்னொளியில் கெட்டிமேல சத்தமிட,
மண்ணிற்க்கு வருகிறாய் நீ முத்தமிட.

உலகின் ஆக்கம் நீயே
இயற்கையின் ஊக்கமும் நீயே
உலகின் அழிவும் நீயே.


சொட்டு சொட்டாய் வந்தால் அழகு
கொட்டி தீா்த்து சென்றால் அழிவு..

நீ சிாித்தால் வழமை
நீ முறைத்தால் வறுமை
உன் வயதுக்கு இல்லவே இல்லை முதுமை..

நீ பட்ட இடமெல்லாம் துளிா்க்கும்
நீ பரவும் இடமெல்லாம் செழிக்கும்.

குறுகி நின்றால் குளம்
விாிந்து சென்றால் ஆறு
பரந்து நின்றால் கடல்
உன் அழகுக்கு குடுக்கலாம் பல கோடி வைர மெடல்.

சடசட வென்று வருவாய்
சலசல வென்று திரிவாய்
பளபள வென்று ஒளிா்வாய்
கடைசியில் கடலாய் நீயும் படிவாய்
சூாியன் வருவான் சாமியாக
அவன் ஒளி பட்டதும் , விண்ணிற்கு செல்வாய் நீ ஆவியாக......

Comments

Popular posts from this blog

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்