காதல்

       
கண்ணுக்கு தெரியாத ஓவியம்
உணா்ச்சியால் மட்டும் உணரக்கூடிய காவியம்.

காதலை போல  அழகும் இல்லை
காதலுக்கு எல்லை என்று எதுவும் இல்லை.

காதலின் ஆழம் அதிசயம் படைக்கும்
அந்த அதிசயம் கூட காதலின் ஆழம் கண்டு திளைக்கும்.

என்னா சொல்லி வருணிப்பது இந்த காதலை
காதல் சென்றுவிட்டது வாழ்க்கையின் எல்லை வரை
காதல் அளவுக்கு அழகும் இல்லை
காதலின் ஆழம் கண்ணறியவும் வில்லை
பல கோடி கவிதைகள் கண்டு இந்த காதல் கண் சோரவும் இல்லை.

வாழ்வின் எல்லை வரை வரும் அன்பு தொல்லை
இதன் எல்லையை எட்டி பிடிதவர்
உலகிலும் இல்லை.

காதல் ஒரு அழியா உலகம்
அதை உணர்ந்தவர்க்கே அந்த உண்மை புரியும்...

                 காதலின் வகை...

பாத்தவுடன் வருவது பரவச காதல்
பா்த்து பாா்த்து வருவது நவரச காதல்
பழகி வருவது பாசக் காதல்
உறவில் வருவது உரிமை காதல்
உணர்வில் வருவது உன்னத காதல்
உள்ளம் கண்டு வருவது உளவியல் காதல்
அன்பில் வருவது ஆழ காதல்
வன்பில் வருவது வளமை காதல்
கவா்சியில் வருவது கள்ளக்காதல்
உணா்ச்சியில் வருவது காம காதல்
இளமையில் இருப்பது இனிமை காதல்
அது முதுமையிலும் தொடர்வதுதான் உண்மை காதல்....

            காதலின் புகழ்

பேசும் பேச்சிலும் காதல்
விடும் மூச்சிலும் காதல்
உள்ளத்திலும் காதல்
உணர்விலும் காதல்
பள்ளி மறைவிலும் காதல்
படுக்கை அறையிலும் காதல்
பாா்க்கிலும் காதல்
பீச்சிலும் காதல்
பஸ் ஸ்டாப்பிலும் காதல்
பறக்கும் தொட்டிலிலும் காதல்
பக்கத்து வீட்டிலும் காதல்
பறக்கும் பட்டத்தீலும் காதல்
மலையிலும் உச்சிலும் காதல்
மரத்து அடியிலும் காதல்
மழையிலும் காதல்
மழையில் குடையிலும் காதல்
சோலைவனத்திலும் காதல்
பாலைவனத்திலும் காதல்
அந்த விண்ணிலும் காதல்
இந்த மண்ணிலும் காதல்
நம் கண்ணிலூம் காதல்
வறுமை பிடியிலும் காதல்
வாழ்வின் முடிவிலும் காதல்
தகவல் தொடர்பிலும் காதல்
தகாத தொடர்பிலும் காதல்
கனவறையிலும் காதல்
மணவரையிலும் காதல
கல்லரையிலும் காதல்...
       
      காதலின் உணர்ச்சி

காதலை கண்டால் படபடப்பு
காதலை கொண்டால் துடிதுடிப்பு..

நிலவும் உன் வீட்டு கொடியில் காயும்
நீ நினைத்தால் ஒரு நொடியில் வந்து, உன் மடியில் சாயும்.

பாா்க்க பாா்க்க வெக்கம் வரும்
பின் சொ்க்கம் கூட உன் பக்கம் வரும்
கவிதை புயல் ஒன்று உருவெடுக்கும்
காதல் நினைவு உன்னை கிரங்கடிக்கும்...

இரத்தம் யெல்லாம் கொதிகொதிக்கும்
உடல் மொத்தமாக மெய்சிலிா்க்கும்.....








Comments

Popular posts from this blog

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

மழை