அம்மா


                         
தாயே தாயே,தவமில்லாமல் கிடைத்த வரமே நீயே!!!

அணுவை கரு வாக்கி
கருவை உறுவாக்கி
உறுவை உடலாக்கி
பத்து மாத சுமையை சுகமாக்கி!!
பிரசவ வலியை வரமாக்கி!!
என்னை பெற்றெடுத்தாய் , தாயே நீயே!!!!

தாய்மையுடன் பாலுட்டி
தெட்டிலில் தாலாட்டி
நிலவு காட்டி சோறுற்றினாய்யே!!!

பாசத்துடன் பாராட்டி
பண்புடன் சீராட்டி
பரவசத்தில் என்னை ஆழாக்கினாய்யே

என் தொல்லைகளை நீ தாங்கி
எனக்கு பிடித்ததையெல்லாம் தான் வாங்கி
நான் சிறகடிக்கதான் ஏங்கினாய்யே.

என் சிாிப்பை நீ ரசித்தாய்யே
என் பசி தீா்ந்த பின் தான்  உணவை ருசித்தாயே

உனக்கு வலியென்றால் மறைத்திடுவாய்
எனக்கு வலியென்றால் துடித்திடுவாய்

கண் இமைக்கும் நேரத்தில் சமைத்திடுவாயே
என் பசி தீரும் வரும் வரை உணவு படைத்திடுவாயே
என் பசி தீா்ந்த பின்னே நீ ருசித்திடுவாயே...

சேட்டை செய்தால் கன்டிப்பாய்
தவறு செய்தால் தன்டிப்பாய்
பின் தன்டிதற்கு கண்கலங்கி சிந்திபாய்..

தாயே தாயே,தவமில்லாமல் கிடைத்த வரமே நீயே!!!

உன் மனம் யாருக்கு வரா தம்மா
அந்த தெய்வம் கூட உனக்கு ஈடாகா தம்மா....








Comments

Popular posts from this blog

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

மழை